ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள்
ஒரு காலத்தில், முன்பு நடந்த முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் குறித்து படித்திருக்கிறோம், கருப்பு வெள்ளையில் புகைப்படங்களையும், அபூர்வக் காட்சிகளை வீடியோவாகவும் பார்த்திருக்கிறோம்.
ஆனால், இன்று கண் முன்னே போர்க்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதுவும் சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில், கிட்டத்தட்ட உடனுக்குடன் போர்ச் செய்திகளை அறிந்துகொள்வதுடன் மட்டுமல்லாமல், தாக்குதல் நடைபெறும் காட்சிகளையும் கண் முன்னே பார்த்துக்கொண்டிருகிறோம்.
தொடர்ந்து உக்ரைன் ரஷ்யப் போர் காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள் ஊடகவியலாளர்கள் சிலர்.
அவ்வகையில், ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி, உக்ரைன் தனது Tochka-U வகை ஏவுகணைகளை ஏவும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
ஏவுகணைகளை ஏவும் அமைப்பு, தானாக விண்ணை நோக்கி உயர்ந்து, அதிலிருந்து ஏவுகணைகள் ஏவப்படும்போது, கண் முன்னே போரைக் காண்கிறோம் என்ற உணர்வு ஏற்படுவதால், அந்த காட்சி புல்லரிக்கச் செய்வதாக அமைந்துள்ளது.
Launch of three Ukrainian Tochka-U ballistic missiles reportedly toward Russian ammunition depots.#Russia #Ukraine pic.twitter.com/SSqwlrggn2
— BlueSauron👁️ (@Blue_Sauron) June 23, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.