ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் இணையத்தை கலக்கும் உக்ரேனிய ‘வொண்டர் வுமன்’
ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரேனிய தாயின் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 13வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அதன் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாமல் முடிந்தது.
இதனிடையே, ஆயுதங்கள் தேவைப்படும் உக்ரேனிய மக்களுக்கு அரசாங்கமே வழங்கும் என போர் தொடங்கிய சில நாட்களிலே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார்.
இந்நிலையில், மக்கள் கூட்டம் நிறைந்த உக்ரைன் சாலையில், பெண் ஒருவர் தோள்பட்டையில் துப்பாக்கியை மாட்டிக்கொண்டு, ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் குழந்தையும் பிடித்த படி சாலையை கடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உக்ரைனின் மூலோபாய தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு மையம், அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு உக்ரேனிய தாயும் ‘வொண்டர் வுமன்’ என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானவர் என்ற வசாகத்துடன் குறித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.
Every Ukrainian mother deserves to be called a Wonder Woman ? pic.twitter.com/4m1WMArb56
— Stratcom Centre UA (@StratcomCentre) March 5, 2022
குறித்து புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளது, 1000-க்கும் மேற்பட்டோர் அதை லைக் செய்துள்ளனர்.