ரஷ்யா உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தங்கள் நாட்டு பிரதிநிதியை சுட்டுக்கொன்ற உக்ரைன்! ஏன்?
ரஷ்யா உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் பிரதிநிதிகள் குழு உறுப்பினர் Denis Kireev சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Denis Kireev சுட்டுக் கொல்லப்பட்டத்தை உக்ரைன் எம்.பி Oleksandr Dubinsky தனது டெலிகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசத்துரோக செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் Denis Kireev-ஐ கைது செய்ய முயன்ற போது, உக்ரைன் பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக் கொன்றதாக Dubinsky குறிப்பிட்டுள்ளார்.
Denis Kireev ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
உக்ரைன் தலைநகர் கீவில் வைத்து Denis Kireev சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உடன் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உக்ரைன் பிரதிநிதி குழுவில் இடம்பெற்றிருந்த Denis Kireev, 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் பிரதிநிதி குழுவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.