உக்ரைனில் நேரடி தாக்குதலை தொடங்கிய ரஷ்யா: பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு!
உக்ரைனில் நேரடி தாக்குதலை தொடங்கிய ரஷ்யா தெற்கில் கிரைமியாவிலும், பெலாரூஸிலும் எல்லையை தாண்டியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லுஹான்ஸ்கில் 2 நகரங்களை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கிளிவ்வில் பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர். பெரும்பாலானோர் பேருந்துகள் மூலம் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். பலர் கார்களிலும் நகரத்தை விட்டு வெளியேற முயற்சித்ததால், பல கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
ராணுவ தளவாட இடங்களையே தாக்குவதாக ரஷ்யா அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளையும் ரஷ்ய ராணுவம் தாக்கிவருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் ரஷ்யா ராணுவத்தின் இந்த தாக்குதலில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.