உக்ரைனின் முதன்மையான அரசியல்வாதி பட்டப்பகலில் படுகொலை
உக்ரைன் அரசியல்வாதி ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கிதாரியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு
குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், பொலிசார் கொலையாளியைத் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
54 வயதன Andriy Parubiy பட்டப்பகலில் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு உக்ரைன் நகரமான Lviv-ல் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவர் சுடப்பட்டுள்ளார். ஜெலென்ஸ்கி தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், Andriy Parubiy கொல்லப்பட்டுள்ளார், அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கல்கள் என பதிவு செய்துள்ளார்.
சபாநாயகராக
அத்துடன், கொலையாளியைத் தேடுவதற்கும் விசாரணை செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வழிமுறைகளும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னர் Andriy Parubiy செயல்பட்டுள்ளார். இவர் உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |