தொடரும் தாக்குதல்கள்! உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட பரபரப்பு வீடியோ
ரஷ்யா எப்படி மிரட்டினாலும் கீவ் நகரை விட்டு நான் செல்லப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான விளாடிமிர் ஜெலன்ஸ்கி.
ரஷ்யா 2வது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், தங்களது உயிரை காப்பாற்ற மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
நேற்று மட்டும் 100க்கும் அதிகமான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், என்னை அழிப்பதற்காகவே ரஷ்யாவில் நாசவேலை குழுக்கள் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளது.
என்னை அழிப்பதன் மூலம் உக்ரைனை அழிக்கலாம் என்று ரஷ்யா நினைக்கிறது. ரஷ்யா எப்படி மிரட்டினாலும் கீவ் நகரை விட்டு நான் செல்ல போவதில்லை என தெரிவித்துள்ளார்.