போரினால் எல்லாவற்றையும் இழந்த உக்ரேனிய அகதிக்கு அடித்த அதிர்ஷ்டம்
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குடிமகனுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டத்தால் அவருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.
5 லட்சம் யூரோ பரிசு
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போர் காரணமாக, இந்த இளைஞன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அகதியாக பெல்ஜியம் சென்றார். கடந்த 12 மாதங்களாக பிரஸ்ஸல்ஸில் வசித்து வரும் இந்த இளைஞன் அங்கு ஒரு புதிய வாழ்க்கை தொடங்கும் கனவுடன் இருந்தார்.
இந்த நிலையில்தான் அவருக்கு மிகப்பாரிய அதிர்ஷடமாக லொட்டரியில் 5 லட்சம் யூரோ பரிசாக விழுந்துள்ளது. இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 18 கோடியாகும். இதன் மூலம் பெல்ஜியத்தில் தனது வாழ்க்கை முற்றிலும் மாறும் என்பதில் உறுதியாக உள்ளார் அந்த இளைஞன்.
Reuters
பெல்ஜியம் லொட்டரி
இவர் கடந்த மாதம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு பெல்ஜியம் நேஷனல் லொட்டரியில் ஸ்கிராட்ச் கார்டு லொட்டரி டிக்கெட்டை வாங்கினார். இதற்காக ஐந்து யூரோக்கள் மட்டுமே செலவிட்டதாக அந்த இளைஞர் கூறுகிறார்.
"இதில் எனக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்று கூறிய அந்த இளைஞன் தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை. பெல்ஜிய லாட்டரி சட்டத்தின் கீழ் வெற்றியாளர்களின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை.
DayFREuro
கொண்டாட முடியவில்லை
இந்த இளைஞர் 18 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. லொட்டரியில் பரிசு விழுந்தாலும் தனது நாட்டில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது கொண்டாடும் சூழ்நிலை இல்லை என்பது அவரது நிலைப்பாடு.
அகதி வாழ்க்கை எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கேட்கும் அந்த இளைஞன் இந்தப் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம்.
இருப்பினும், அவர் பெல்ஜியம் செல்ல உதவிய அனைவருக்கும் ஒரு பாரிய விருந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தப் பணத்தை வைத்து நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கும் இந்த இளைஞன், தன்னைப்போல போரில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு உதவி செய்ய வழியை தேடிக்கொண்டிருக்கிறாரார்.