14 மாத சிறைவாசம்..!உக்ரைனிய கடற்படையினரை விடுவித்த ஹவுதிகள்
ஹவுதி படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட உக்ரைனிய கடற்படையினர் 14 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏமனின் ஹவுதி படையினரால் 14 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டு இருந்த மூன்று உக்ரைனிய கடற்படையினர் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஒடேசாவில்(Odesa) உள்ள தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
Three Ukrainian sailors, who were freed from captivity by Yemeni Houthis, have arrived in Odesa and reunited with their families.
— NEXTA (@nexta_tv) January 26, 2025
The sailors had been held captive for 14 months — since November 2023, when the Houthis seized the crew of the ship Galaxy Leader. Since then,… pic.twitter.com/SorZ568gSA
கடத்தப்பட்ட உக்ரைனிய கடற்படை மாலுமிகள் கேலக்ஸி லீடர் என்ற கப்பலின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தனர்.
இவர்கள் ஏமன் ஹவுதி படையினரால் கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் கேலக்ஸி லீடர் கப்பல் கடத்தப்பட்டதில் இருந்து உக்ரைனிய படையினர் கைதிகளாக இருந்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை விடுவிக்க தீவிர தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கேலக்ஸி லீடர் கப்பலின் குழுவில் உக்ரேன், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பல்கேரியா மற்றும் ரோமானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |