நான்கு நாட்கள் காத்திருந்து... 2,000 மீற்றர் தொலைவில் இருந்து சம்பவம் செய்த உக்ரைன் வீரர்
உக்ரைன் துப்பாக்கிச் சுடும் வீரர் ஒருவர் சுமார் 2 கி.மீற்றர் தொலைவில் இருந்து ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
2,069 மீற்றர் தொலைவில்
வரலாற்றிலேயே மிகத் தொலைவில் இருந்து முன்னெடுக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட கொலைகளில் ஒன்று இதுவென கூறுகின்றனர். Lektor என அடையாளம் காணப்பட்ட அந்த துப்பாக்கி வீரர் கனமழை மற்றும் பலத்த காற்றினூடே நான்கு நாட்கள் காத்திருந்து, அந்த ரஷ்ய வீரரை சுட்டுக் கொன்றுள்ளார்.
அதுவும் 2,069 மீற்றர் தொலைவில் இருந்து உக்ரைன் வீரர் இதை சாதித்துள்ளார். மட்டுமின்றி, தனது 338 Lapua Magnum-caliber துப்பாக்கியால் வெறும் ஒற்றை தோட்டாவை செலவிட்டு ரஷ்ய வீரரின் உயிரைப் பறித்துள்ளார்.
Lektor மற்றும் அவரது குழு பல நாட்களாக முகாமிட்டிருந்த பகுதியில், அடிக்கடி ரஷ்ய ட்ரோன் பறப்பதை கவனித்துள்ளார். ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் உளவு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளது.
நடந்த சம்பவம் தொடர்பில் இந்த வாரத்தில் முதல்முறையாக வெளிப்படுத்திய Lektor, தனக்கு மிகவும் பிடித்தமான துப்பாக்கியால், அதற்குரிய தோட்டாவால் சவால் நிறைந்த அந்த திட்டத்தை முன்னெடுத்ததாக குரிப்பிட்டுள்ளார்.
எதிரியை குறி வைக்கும் போது
மேலும், கிலோ மீற்றர்கள் தொலைவில் இருக்கும் எதிரியை குறி வைக்கும் போது, பயன்படுத்தும் துப்பாக்கி, மற்றும் தோட்டா குறித்து, அதன் தன்மை தொடர்பில் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், உரிய துப்பாக்கி மற்றும் தோட்டாவை பயன்படுத்துவதும் சிறந்த பலனைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சின்னதாய் தவறிழைத்தாலும், எதிரியின் ட்ரோன்கள் நம்மை கண்டிப்பாக பழி வாங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Lektor-ன் செயலை உக்ரைன் தளபதிகள் மற்றும் உளவுத்துறை வெகுவாக பாராட்டியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் 3,800 மீற்றர் தொலைவில் உள்ள ரஷ்ய வீரரை உக்ரேனிய வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதே, சாதனையாக கருதப்பட்டது. ஆனால் தற்போது 2,069 மீற்றரில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரை 11,614 அடி தொலைவில் இருந்து கனேடிய வீரர் ஒருவர் சுட்டுக்கொன்றதே இதுவரையான சாதனையாக பதிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |