ரஷ்யாவுக்கு உளவு பார்த்த உக்ரைனிய ராணுவ வீரர்: மனைவியுடன் கைது
Ukrainian soldier and wife arrested for spying: உக்ரைனில் ரஷ்யாவிற்காக உளவு வேலை பார்த்த ராணுவ வீரரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்..
ரஷ்ய உளவாளி கைது
உக்ரைனிய ராணுவத்தில் பணியாற்றி வரும் வீரர் ஒருவர் ரஷ்யாவிற்காக உளவு வேலை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை அந்த நபரை உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு பிரிவான SBU (Ukrainian Security Service) கைது செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், உக்ரைனின் ஆயுதப் படைகளின் பிராந்திய பாதுகாப்பு பிரிவான தெரோபோரோனி படையில் பணியாற்றிய ராணுவ வீரர் ரஷ்யாவிற்கு முகவராக செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
மேலும் ராணுவ வீரரின் மனைவியையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கார்கிவ் நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |