சரணடையவா சொல்கிறீர்கள்... ரஷ்ய போர் வாகனத்தை சிதறடித்து சரியான பதிலடி கொடுத்த உக்ரைன் வீரர்கள்
சரணடையுங்கள் அல்லது செத்து மடியுங்கள் என ரஷ்யா விடுத்த மிரட்டலுக்கு பதிலடியாக, ரஷ்யப் போர் வாகனம் ஒன்றைச் சிதறடித்து பதிலடி கொடுத்துள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.
உயிர் பிழைக்கவேண்டுமானால் இரண்டு மணி நேரத்திற்குள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள் என உக்ரைனின் மரியூபோலில் இருக்கும் உக்ரைன் வீரர்களுக்குக் கெடு விதித்தது ரஷ்யா.
ஆனால், அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாத உக்ரைன் வீரர்கள், தாங்கள் கொஞ்சம் பேராக இருந்தாலும் தில்லாக ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
கடைசி வரை போராடுவோம் என்று கூறியிருக்கும் அந்த உக்ரைன் வீரர்கள், தங்களுக்குக் கெடு விதித்த ரஷ்யாவின் போர் வாகனம் ஒன்றை ஆங்கிலத் திரைப்பட பாணியில் சிதறடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், உக்ரைன் வீரர் ஒருவர் ரஷ்ய இராணுவ வாகனம் ஒன்றை ஏவுகணை ஒன்றின் மூலம் தாக்குவதையும், அது மிகச்சரியாக அந்த ரஷ்ய வாகனத்தைத் தாக்க, உற்சாகத்தில் அவர் Yes என்று கூறி மகிழ்வதையும் காணலாம்.
இதற்கிடையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள Donetsk மற்றும் Luhansk நகரங்களை கைப்பற்றும் முயற்சியை ரஷ்யா இரட்டிப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
[ZPBGD ]