புதிதாக களமிறக்கப்பட்ட ரஷ்யாவின் அதிநவீன போர் வாகனத்தை துவம்சம் செய்த உக்ரைன் வீரர்கள்
ரஷ்யா முதன்முறையாக போரில் களமிறக்கிய அதிநவீன போர் வாகனம் ஒன்றை உக்ரைன் படைகள் துவம்சம் செய்துள்ளன.
4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய T-90M என்னும் அந்த ரஷ்ய tankஇன் வெளிப்பக்கம் எஃகினால் உருவாக்கப்பட்டதாகும். அத்துடன், தன்னை வேறு போர் வாகனங்கள் தாக்குவதற்காக லேசர் ஒளிக்கற்றை மூலம் குறிவைத்தால், உடனே, தானாகவே புகை வெளியிடும் குண்டுகளை வீசும் அதிநவீன போர் வாகனம் அது.
அந்த போர் வாகனம் இப்போதுதான் முதன்முறையாக போரில் பயன்படுத்தப்படுகிறதாம்.
ஆனால், அந்த அதிநவீன போர் வாகனத்தையே உக்ரைன் படைகள் தாக்கி அழித்துவிட்டன.
அந்த T-90M ரக போர் வாகனம் முதல், பல்வேறு tankகளை உக்ரைன் வீரர்கள் தாக்கி அழிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வடகிழக்கு உக்ரைனிலுள்ள Kharkiv பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.