முகம் முழுவதும் கண்ணாடி துகள்களுடன் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உயிர் தப்பிய ஆசிரியை! உலகளவில் வைரலான புகைப்படம்
ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் நூலிழையில் ஆசிரியை ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனில் ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக இந்த தாக்குதலானது நடந்து வரும் நிலையில் சில முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கார்கிவ் நகரின் சுகுவேவ் என்ற இடத்தில் வசிக்கும் Olena Kurilo (52) என்ற ஆசிரியை என்பவர் வீட்டின் மீதும் ஏவுகணை விழுந்தது. இதில் அவரது வீடு முற்றிலும் நாசம் அடைந்தது.
ஆனால், Olena பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். முகம் முழுதும் கண்ணாடி துகள்களுடன் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தில் ரத்தக் காயத்துடன் கட்டுப்போட்ட குரிலேவின் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
Olena கூறுகையில், நான் என் தாய்நாட்டிற்காக அனைத்தையும் செய்வேன். ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து உயிர் தப்பியது என் அதிர்ஷ்டம் தான், என்னை guardian angel போன்ற அமானுஷ்ய சக்தி காப்பாற்றியதாக உணர்கிறேன்.
உக்ரைனுக்காக என்னால் முடிந்தவரை, என்னிடமுள்ள ஆற்றலுடன் அனைத்தையும் செய்வேன். நான் எப்போதும் என் தாய்நாட்டின் பக்கம் மட்டுமே இருப்பேன் என முழுவதுமாக சேதமடைந்த வீட்டை பார்த்தபடியே கூறுகிறார்.