போரை முடிவுக்கு கொண்டுவர இதுவே தீர்வு... ஜெலென்ஸ்கி திட்டவட்டம்
தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் உக்ரைன் பிரதேசங்கள் மொத்தம் நேட்டோ பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்தால் மட்டுமே ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோ பாதுகாப்பில்
பிரித்தானிய செய்தி ஊடகம் ஒன்றிற்கு நேர்முகம் அளித்துள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அத்தகைய திட்டம் உக்ரைனால் ஒருபோதும் பரிசீலிக்கப்படவில்லை ஏனெனில் அது உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்றார்.
போரை நாம் முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் நிலப்பரப்பு மொத்தம் நேட்டோ பாதுகாப்பில் கொண்டுவரப்பட வேண்டும். அதை மிக விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
அதன் பின்னர், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை பேச்சுவார்த்தைகள் ஊடாக திரும்பப்பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் போர் நிறுத்தம் தொடர்பாக தமது திட்டம் தொடர்பில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் ஜெலென்ஸ்கி கலந்துரையாடினார். ஆனால் உக்ரைனை ஆதரிக்கும் சில மேற்கத்திய நாடுகள் ஜெலென்ஸ்கியின் திட்டத்தை ஏற்க தயக்கம் காட்டியுள்ளன.
போர் முடிவுக்கு வரும் முன்னர் நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைத்துக்கொள்வதில் இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
உக்கிரத் தாக்குதல்
இதனிடையே, உக்ரைனில் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் உக்கிரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. கடுமையன உறைபனி வெப்பநிலையில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெப்பம் மற்றும் மின்சாரம் இல்லாமல் தவிக்க விடப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தாக்குதல் தொடர்பில் வியாழக்கிழமை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் விவாதித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ள பிரித்தானிய பிரதமர், இன்னொரு தொகுப்பு Storm Shadow ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |