தங்களை விட வலிமையான ரஷ்யப் போர் வாகனத்தை துவம்சம் செய்யும் உக்ரைன் வீரர்கள்: கவனம் ஈர்க்கும் ஒரு வீடியோ
தங்களுடையதை விட வலிமையான ரஷ்யப் போர் வாகனம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் துவம்சம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
ஆயுதங்களை சுமந்துகொண்டு பயணிக்கும்போது, தங்களை எதிரிகள் தாக்கினால் தற்காத்துக்கொள்ளும் அளவுக்கே வசதி கொண்ட ஒரு வாகனத்தைக் கொண்டு, ரஷ்யாவின் வலிமையான போர் வாகனம் ஒன்றைத் தாக்கி துவம்சம் செய்திருக்கிறார்கள் உக்ரைன் வீரர்கள்.
புடினுடைய போர் வாகனங்கள், அந்த உக்ரைன் வாகனத்தை விட உறுதியானதும், நான்கு மடங்கு கூடுதல் சக்தி கொண்ட குண்டுகளை செலுத்தும் திறனும் கொண்டவையாகும். ஆனாலும், வெளியாகிய வீடியோ ஒன்றில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்த, உக்ரைன் வீரர்களின் எளிய குண்டுகள் ரஷ்யாவின் வலிமையான போர் வாகனத்தை வெடித்துச் சிதறச் செய்வதைக் காணலாம்.
எளிதில் குண்டு துளைக்க முடியாத அந்த ரஷ்யப் போர் வாகனத்தை உக்ரைன் வீரர்களின் குண்டுகள் சரமாரியாகத் தாக்க, அந்த ரஷ்யப் போர் வாகனம் வெடித்துத் தீப்பிழம்பாக மாறுகிறது.
இந்த சம்பவம், தற்போது பரபரப்படைந்துள்ள கிழக்கு உக்ரைனிலுள்ள Donetsk நகரிலுள்ள சாலை ஒன்றில் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் வீரர்களின் தாக்குதலில் மிக முக்கியமான ரஷ்யக் கப்பல் உட்பட கடுமையான இழப்புகள் பலவற்றைச் சந்தித்து வரும் ரஷ்யா, மேலும் உக்கிரமடைந்துள்ளதால், அது கூடுதல் படைகளுடன் சீக்கிரத்தில் தாக்குதல்களில் இறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.