தலைநகர் கீவ்வை கைப்பற்றாததற்கு இது தான் காரணம்? உக்ரைன் மீது ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைன் படைகள் குடிமக்களை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகின்றனர் என ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Igor Konashenkov குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீது 5வது நாளாக ரஷ்ய போர் தொடுத்து வருவதற்கு மத்தியில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Igor Konashenkov இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த Igor Konashenkov, கீவ் நகரில் உள்ள அனைத்து குடிமக்களும் கீவ்-Vasylkiv நெடுஞ்சாலை வழியாக தலைநகரை விட்டு சுதந்திரமாக வெளியேறலாம்.
இந்த வழி திறந்திருக்கிறது மற்றும் பாதுகாப்பானது என அவர் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைன் முழுவதும் உள்ள வான்வெளியை ரஷ்ய விமானப்படை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என Igor Konashenkov குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் கீவ் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கீவில் உள்ள மக்களை வெளியேற அனுமதித்துவிட்டு, மக்கள் வெளியேறி பிறகு தாக்குதல் தொடுத்து உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்ய திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.