ரஷ்ய படைகள் துரத்தியடிப்பு...அடுத்தடுத்து நகரங்களை விடுவித்து உக்ரைன் ராணுவம் அதிரடி!
உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜபோரிஷியா(Zaporizhia) பகுதி உக்ரைன் தரைப்படைவீரர்களால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்கள் சிலவற்றை கைப்பற்றி ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டாலும் உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் தொடர்ந்து அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ரஷ்ய ராணுவ படையின் கட்டுப்பாட்டில் இருந்து தலைநகர் கீவ் அருகில் உள்ள இர்பின் நகரும் உக்ரைன் ஆயுதப்படையால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜபோரிஷியா(Zaporizhia) பகுதியை உக்ரைனிய தரைப்படை மற்றும் வான்தாக்குதல் படைகள் இணைந்து ரஷ்ய அக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு எடுத்துள்ளது.
இதன் மூலம் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்து Zatyshshia, Malynivka, Vesele, Zelenyi Hai மற்றும் Chervone ஆகிய 5 பகுதிகள் வெளிவந்துள்ளன.
இதனை உக்ரைன் தரைப்படை அவர்களது டெலெக்ராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.