அமெரிக்காவின் அழுத்தம்... முக்கிய நகரம் ஒன்றில் இருந்து பின்வாங்கிய உக்ரேனியப் படைகள்
ரஷ்யாவுடன் கடுமையான போரில் சிக்கியுள்ள கிழக்கு நகரமான சிவர்ஸ்கில் இருந்து உக்ரேனியப் படைகள் வெளியேறிவிட்டதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அமெரிக்கா அழுத்தம்
கிழக்கு உக்ரைனின் பாதுகாப்புக்கு முக்கியமான முக்கிய நகரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில், ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் தீவிரமான தாக்குதலை நடத்தி வரும் நிலையிலேயே, உக்ரைன் தரப்பில் இருந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பால், ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போரில் விரைவாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், சிவர்ஸ்க் நகரின் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.
இதனால் ரஷ்யப் படைகள், மேற்கே சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்லோவியான்ஸ்க் நகரின் மையப்பகுதிக்கு மேலும் முன்னேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் பெரும் தொழில்மயமாக்கப்பட்ட டோன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள நகரங்களின் பாதுகாப்பு அரணாகவே ஸ்லோவியான்ஸ்க் நகரம் உள்ளது.
போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், டோன்பாஸ் பிராந்தியத்தை மொத்தமாக ஒப்படைக்கக் கேட்கிறது ரஷ்யா.

கடுமையான இழப்பு
இந்த நிலையில், கடினமான வானிலை நிலைகளில் சிறிய தாக்குதல் குழுக்களிடமிருந்து வரும் தொடர்ச்சியான அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக ரஷ்ய படைகளால் முன்னேற முடிந்தது என உக்ரைன் தளபதி ஒருவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிர்களையும் வளங்களையும் பாதுகாப்பதற்காகவே படைகள் பின்வாங்கப்பட்டதாகவும், இருப்பினும், உக்ரைன் படைகள் எதிரிக்குக் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சிவர்ஸ்க் நகரத்தைத் தாங்கள் கைப்பற்றிவிட்டதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா கூறியிருந்தது, ஆனால் அதை உக்ரைன் நிர்வாகம் மறுத்திருந்தது.
இதனிடையே, தங்கள் படைகள் அந்த நகரத்தின் மீது அழுத்தத்தைத் தொடர்ந்து செலுத்தி வருவதாகவும், உள்ளே இருக்கும் ரஷ்யப் படைகளுக்கான தளவாட விநியோகத்தைத் துண்டிக்கும் முயற்சிகளைத் தொடரும் என்றும் உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |