ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் பெண் வீராங்கனைகளை அவமானப்படுத்துவதற்காக என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்...
இரு நாடுகளுக்கிடையே போர் உருவாகும்போது அதில் பாதிக்கப்படுபவர்கள் போர் வீரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான்.
பொதுமக்களைத் தாக்கக்கூடாது என்றெல்லாம் போர் விதிகள் உள்ளன. ஆனால், இதுவரை நடந்த போர்களில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாத போர்கள் எத்தனை?
குறிப்பாக, போர் உருவாகும்போதெல்லாம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்!
எதிரி நாட்டுப் பெண்களை வன்புணர்ந்து, அந்நாட்டின் மீதான வன்மையை வெளிப்படுத்துவது, எந்த விதத்தில் போர் நீதி?
ரஷ்யாவும் உக்ரைனில் அதைத்தான் செய்திருக்கிறது!
தாங்கள் கைப்பற்றிய உக்ரைன் நகரங்களில் இருந்த பெண்களை வயது வித்தியாசமே இல்லாமல் கொடூரமாக சீரழித்திருக்கிறார்கள் ரஷ்ய வீரர்கள்.
பெற்ற பிள்ளை கதறி அழ, அதன் கண் முன்னேயே துப்பாக்கி முனையில் வன்புணரப்பட்ட தாய் குறித்த பயங்கர செய்தி ஒன்று வெளியாக, Kharkiv நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பள்ளி ஒன்றில் இளம்பெண் ஒருவர் அடைக்கலம் புக, அங்கு ரஷ்ய வீரர்கள் அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் கொடூரமாக சீரழித்திருகிறார்கள்.
சீரழித்த பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் விடயம் வெளிவந்துவிடும் என அஞ்சியோ என்னவோ, அவர்கள் உடல்களை தீவைத்து எரிக்க முயன்ற கொடூரங்களும் நடந்துள்ளன.
பொதுமக்களின் நிலைமையே இப்படி என்றால், ரஷ்ய இராணுவத்திடம் சிக்கிய உக்ரைன் போர் வீராங்கனைகளின் நிலை என்னவாகியிருக்கும்? யாருக்கும் தெரியாது!
சமீபத்தில், உக்ரைனிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களைக் கொடுத்து, அவர்களுக்கு பதிலாக சில உக்ரைன் போர் வீராங்கனைகள் ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் நிலைமையைப் பார்த்தாலே தெரிகிறது அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்று!
அவர்களை அவமானப்படுத்துவதற்காக, அவர்களது தலையை மொட்டையடித்துள்ளது ரஷ்ய இராணுவம்...
புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தபோது, நாஸிக்களிடம் சிக்கியுள்ள தங்கள் சகோதர சகோதரிகளை மீட்பதற்காக உக்ரைனுக்குச் செல்லுமாறு புடின் தங்களை அனுப்பியதாக ரஷ்ய போர் வீரர்கள் கூறியிருந்தார்கள்.
அப்படி தங்கள் சொந்த சகோதர சகோதரிகளை மீட்க வந்த ரஷ்ய வீரர்களுக்கு, தாங்கள் சீரழித்ததும் தங்கள் சொந்த சகோதரிகளைத்தான் என்ற உணர்வு மட்டும் வரவில்லையா?
இந்த அப்பாவி மக்களின் மரணங்கள், வன்புணரப்பட்ட பெண்களின் துயரம், கொல்லப்பட்ட சிறுகுழந்தைகளின் பாவம் என இவை எல்லாவற்றிற்கும் புடின் பதில் சொல்லியே ஆகவேண்டும்.