ரஷ்ய துருப்புகளிடம் தனியாக சிக்கிய உக்ரைன் குடும்பம்: பதறவைக்கும் சம்பவம்
உக்ரைன் தலைநகர் கீவ் எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றப்படும் நிலையில், பெண் மற்றும் அவரது பிள்ளைகள் உட்பட 7 பேர் தனியாக அவர்களிடம் சிக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கீவ் நகரத்தை கைப்பற்ற ரஷ்ய துருப்புகள் கடுமையாக போராடி வருகின்றனர். நகரின் இரு பக்கத்தில் இருந்தும் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய துருப்புகளின் கைகளில் கீவ் நகரம் சிக்கலாம் என்ற நிலையில், பெண்கள் சிறார்கள் என மக்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே, கீவ் நகருக்கு அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றில், பெண் மற்றும் அவரது பிள்ளைகள் உட்பட 7 பேர்கள் ரஷ்ய துருப்புகளிடம் தனியாக சிக்கி, துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் நகரை தரைமட்டமாக்கினால் ஒழிய உங்களால் கைப்பற்ற முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவுக்கு சபதம் செய்த நிலையில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களில் கீவ் நகரை கைப்பற்றிவிடுவோம் என கொக்கரித்த ரஷ்யா தற்போது 17 நாட்களுக்கு பின்னர் கீவ் நகரை நெருங்கியுள்ளது. நகரின் வெளியே சுற்றிவளைத்துள்ள ரஷ்ய துருப்புகள் இருபக்கம் இருந்தும் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால், துணிச்சலான உக்ரைன் வீரர்கள், ரஷ்ய டாங்கிகள் நகருக்குள் நுழையாமல் இருக்க சாலைகள் எங்கும் தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். ரஷ்ய துருப்புக்கள் கீவ் நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் தற்போது இருப்பதாக நம்பப்படுகிறது,
இதனால் உயிருக்கு பயந்த உக்ரேனியர்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையிலேயே பெண் மற்றும் சிறார்கள் உட்பட 7 பேர்களை ரஷ்ய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஆனால், ரஷ்ய தரப்பில் குறித்த தகவலை மறுத்துள்ளதுடன், பொதுமக்கள் மீது தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தியதில்லை எனவும் தெரிவித்துள்ளது.