ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கொல்லப்பட்டால் என்ன நடக்கும்?
ரஷ்யாவின் போர் தாக்குதலில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கொல்லப்பட்டால், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தி செல்லும் தெளிவான அடுத்தகட்ட திட்டங்களை உக்ரைன் அதிகாரிகள் தயாராக வைத்து இருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா முன்நகர்த்திவரும் போர் இன்றுடன் 12வது நாளை எட்டியிருக்கும் நிலையில், உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை கொலைச் செய்யும் சதித்திட்டமானது இதுவரை மூன்று முறை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று அமெரிக்காவின் Face The Nation என்ற செய்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்காவின் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவால் கொல்லப்பட்டால் உக்ரைன் அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தி செல்லும் அடுத்தகட்ட திட்டங்களை அந்த நாட்டின் அதிகாரிகள் தயாராக வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
NEWS: @SecBlinken says Ukraine has “plans in place” for continuity of government in the event President Volodymyr Zelensky is killed during Russia’s invasion.
— Face The Nation (@FaceTheNation) March 6, 2022
Tune in at 10:30a E.T. to watch @margbrennan’s full interview. pic.twitter.com/HV3QVAFuNP
தொலைக்காட்சி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியையும், அவரது தலைமையிலான அரசாங்கமமும் உலகிற்கு காட்டி இருக்கும் தைரியமான செயல்களை முதலில் பாராட்டுவதாக தெரிவித்தார்.
பிறகு அவர்கள் உண்மையிலேயே துணிச்சலான உக்ரேனிய மக்களின் உருவகமாக திகழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பிளிங்கன், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவால் கொல்லப்பட்டால், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தி செல்லும் தெளிவான அடுத்தகட்ட திட்டங்களை உக்ரைன் அதிகாரிகள் தயாராக வைத்து இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த கருத்தானது, உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை சந்தித்தபின்பு வெளிவந்து இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.