ஒரே இரவில் ரஷ்யாவைத் தாக்கிய 500 ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய இராணுவம்
ரஷ்யாவில் மாஸ்கோ பகுதியில் உக்ரைன் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு தாக்கியது.
556 ட்ரோன்கள் ஒரே இரவில்
நேற்றிரவு ரஷ்யா மீது உக்ரைன் பாரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. மாஸ்கோ உட்பட ஒரு டசினுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 556 ட்ரோன்கள் தாக்கியுள்ளன.

ஆனால், அவரை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை நடந்த உக்ரைனின் மிகப்பெரிய தாக்குதலில் ஒன்று இது. தாக்குதல் குறித்து மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரே வோரோபியோவ் கூறுகையில்,
"ஒரு தனியார் வீட்டின் மீது ட்ரோன் விமானம் மோதியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும், ஒருவர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளார்" என்றார்.
மேலும், அதிகாலை நடந்த இந்தத் தாக்குதலில் இரண்டு ஆண்கள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ரஷ்யா ஏவிய 287 ட்ரோன்களில் 279-ஐ இடைமறித்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |