பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பல்...”மைல்கல் மிஷன்” தொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தம்
பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பல் பழுதடைந்து பயணம் தடைப்பட்டது.
65,000 டன் எடையுள்ள போர்க்கப்பலில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு குறித்து விசாரணை.
பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான எச்எம்எஸ் பிரினஸ் ஆஃப் வேல்ஸ், தனது அமெரிக்கப் பயணத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே தெற்கு கடற்கரை பகுதியில் பழுதடைந்து நின்றது.
பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பல் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ், அமெரிக்காவுக்கான ”மைல்கல் மிஷன்” (landmark mission) என அறிவிக்கப்பட்ட பயணத்தின் போது தெற்கு கடற்கரை பகுதியில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பளுதடைந்து நின்றது.
Sky News
சுமார் £ 3bn பவுண்ட் மதிப்புள்ள இந்த போர்க்கப்பல், கடந்த ஆண்டே முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது, இந்தநிலையில் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பல் பழுதடைந்து இருப்பது குறித்து விசாரணை நடத்து வருவதாக ராயல் நேவி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு செய்தித்தளமான நேவி லுக்அவுட் வெளியிட்ட தகவலில், 65,000 டன் எடையுள்ள போர்க்கப்பல் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Sky News
HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பல், வட அமெரிக்காவில் மற்றும் கரீபியன் கடற்கரையில் திருட்டுத்தனமான ஜெட் மற்றும் ட்ரோன் நடவடிக்கைகளின் எதிர்கால செயல்பாட்டை வடிவமைக்கும் பணிக்காக சனிக்கிழமையன்று அருகிலுள்ள போர்ட்ஸ்மவுத்திலிருந்து (Portsmouth) புறப்பட்டது.
இந்தப்பயணம் முழுமையாக நடைப்பெற்று இருந்தால் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பல், நியூயார்க், கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் மற்றும் கரீபியன் ஆகிய இடங்களை பார்வையிடவும், ஐந்தாம் தலைமுறை எஃப்-35 வேகமான ஜெட் விமானங்களையும், ட்ரோன்களையும் இயக்குவதைக் காணவும் அமைந்து இருக்கும்.
போர்க்கப்பல் பழுதடைவதற்கு முன்பு கமாண்டிங் அதிகாரி, கேப்டன் ரிச்சர்ட் ஹெவிட் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு பயணம் அட்லாண்டிக் முழுவதும் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் பணிக் குழுவை அழைத்துச் செல்லும் மற்றும் நமது நெருங்கிய கூட்டாளியுடன் நமது நெருங்கிய பணி உறவை வலுப்படுத்தும் என தெரிவித்து இருந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: முதல் வரிசை பாதுகாப்பை உடைத்தது உக்ரைன் இராணுவம்: பின்னுக்கு தள்ளப்படும் ரஷ்ய படைகள்
மேலும் இந்த பயணம் கப்பலில் உள்ள அற்புதமான மாலுமிகளின் முயற்சியின்றி எதுவும் சாத்தியமாகாது என்றும் தெரிவித்து இருந்தார்.