ஜாகுவார் லேண்ட் ரோவர் சைபர் தாக்குதல்: பிரித்தானிய வரலாற்றில் பெரும் பொருளாதார பாதிப்பு
ஜாகுவார் லேண்ட் ரோவர் மீது நடந்த சைபர் தாக்குதலால் பிரித்தானிய வரலாற்றில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tata Motors-ன் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் மீது 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த சைபர் தாக்குதல், பிரித்தானிய வரலாற்றில் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக Cyber Monitoring Centre (CMC) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் 1.6 பில்லியன் பவுண்டு முதல் 2.1 பில்லியன் பவுண்டு வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் JLR நிறுவனத்தின் உள்நிலை தகவல் தொழில்நுட்ப அமைப்பை முடக்கி, Solihull, Halewood மற்றும் Wolverhampton ஆகிய உற்பத்தி மையங்களில் செயல்பாடுகளை நிறுத்தியது.
இதனால் 5,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. விற்பனையாளர் அமைப்புகள் செயலிழந்தன, சப்ளையர்கள் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன.
CMC இந்த தாக்குதலை 'Category 3 systemic event' என வகைப்படுத்தியுள்ளது. அதாவது, JLR நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதை இது குறிக்கிறது.
JLR நிறுவனம் தற்காலிகமாக செயல்பாடுகளை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறது. விநியோகர்களின் பணப்ப்டுழக்கத்தை அதிகரிக்க புதிய நிதி திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் வேலைவாய்ப்பு பாதுகாப்பை பாதித்துள்ளது. சில விநியோகர்கள் ஊதியம் குறைத்தல், வேலை நேர மாற்றம், பணியாளர்களை பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
jaguar land rover cyberattack, tata motors uk hack, uk cyberattack 2025, jlr production shutdown, cyber monitoring centre report, uk economy cyber loss, jlr suppliers impact, automotive cyber incident, uk manufacturing disruption, ransomware attack uk 2025