F-35B போர்விமானத்தை பல பாகங்களாக பிரித்து எடுத்துச்செல்ல திட்டம் - C-17 கார்கோ விமானம் தேவை
இந்தியாவில் பழுதான நிலையயில் நிற்கும் பிரித்தானியாவின் F-35B போர்விமானத்தை பல பாகங்களாக பிரித்து பிரித்தானியாவிற்கு எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14-ஆம் திகதி அவசர தரையிறக்கம் செய்த பிரித்தானிய கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர்விமானம், பல முறை பழுது பார்க்கப்பட்டும் பழுது நீங்காத நிலையில் தற்போது மூடி வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதனை திருப்பி கொண்டுசெல்லும் வகையில் பகுதியாக பல பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு இராணுவ கார்கோ விமானத்தில் பிரித்தானியாவிற்கு எடுத்துச் செல்லப்படும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த போர் விமானத்தை எப்படி பிரித்து எடுத்துச் செல்ல முடியும்?
போர் விமானங்களை, குறிப்பாக ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட F-35B போர் விமானத்தைப் பிரித்து மாற்றுவது சாதாரண விடயம் அல்ல.
ஆனால், C-17 Globemaster III போன்ற சர்வதேச ரீதியில் பிரபலமான கனரக கார்கோ விமானம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
F-35B-யின் நீளம் 14 மீட்டரும், அதில் இறக்கைகள் மட்டும் (wingspan) 11 மீட்டரும் ஆகும். ஆனால் C-17 விமானத்தின் அகலம் வெறும் 4 மீட்டர். எனவே அதன் இறக்கைகள் (wings) பிரிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
சிக்கலான செயல்முறை
பாதுகாப்பாக இறக்கைகளை பிரிப்பது ஒரு மிகுந்த நுணுக்கம் தேவைப்படும் செயல்முறை. ஆனால் திறமையான தொழில்நுட்பக் குழுவால் இந்தச் செயல்முறை அடுத்த சில நாட்களில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற F-35 போர்விமானங்கள் முன்னதாகவும் பிரிக்கப்பட்டு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
2019-ஆம் ஆண்டில், அமெரிக்கா ஒரு F-35A விமானத்தை பிரித்து Utah-க்கு எடுத்துச் சென்றது.
மேலும் 2022-ல் தென் கொரியாவில் ஓர் F-35A belly landing செய்தபின் அதை பிரித்து சாலைவழியாக எடுத்துச் சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
F-35 jet Kerala transport, UK fighter jet dismantle, C-17 Globemaster F-35, British F-35 in India, F-35 stealth jet Kerala, fighter jet airlift news, dismantled fighter aircraft, F-35 emergency landing, Indian airport F-35 jet, Royal Navy fighter repair