பிரித்தானியாவில் வேகமாக குறைந்துவரும் பிறப்பு விகிதம்., G7 நாடுகளில் முதலிடம்
வேறு எந்த ஜி7 நாடுகளையும் விட பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
முற்போக்கு கொள்கைக்கான மையம் (Centre for Progressive Policy-CPP) என்ற சிந்தனைக் குழுவின் ஆய்வால் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், பிரித்தானியாவின் பிறப்பு விகிதம் 18.8% குறைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.
கருவுறுதல் விகிதம் (fertility rate) என்று பரவலாக குறிப்பிடப்படும் இந்த எண்ணிக்கை, 2010 முதல் 2022-இல் வெளியிடப்பட்ட மிக சமீபத்திய புள்ளிவிவரங்கள் வரை பிறப்பு புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டது.
இந்த 12 வருட காலப்பகுதியில் G7 நாடுகளில் பிரித்தானியா மிகப்பாரிய விகிதத்தில் வீழ்ச்சியடைந்ததாக தரவு வெளிப்படுத்தியது.
இந்த வீழ்ச்சிக்கும் எண்ணிக்கைக்கும் மக்களிடம் உள்ள 'சிக்கன நடவடிக்கைகள்' () மிக அமுக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
இந்த பகுப்பாய்வின்படி, பிரித்தானியாவிற்கு பிறகு பிறப்பு விகிதத்தில் இரண்டாவது மிகப்பாரிய வீழ்ச்சியைக் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது.
அதையடுத்து அமெரிக்கா மூன்றாவது இடத்திலும், கனடா, பிரான்ஸ் மற்றும் பின்னர் ஜப்பான் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
ஜேர்மனியின் பிறப்பு விகிதம் 13.7% அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |