பிரித்தானியாவில் உருவாக்கப்படும் முதல் சூப்பர் பல்கலைக்கழகம்
பிரித்தானியாவில் 2026-ஆம் ஆண்டில் முதல் சூப்பர் பல்கலைக்கழகம் உருவாக்கப்படவுள்ளது.
இது Kent மற்றும் Greenwich பல்கலைக்கழகங்கள் இனைந்து உருவாக்கும் புதிய கல்வி நிறுவனமாகும்.
London and South East University Group என பெயரிடப்படும் இந்த புதிய அமைப்பு, ஒற்றை துணைவேந்தரின் கீழ் செயல்படும்.
இந்த இணைப்பு, பிரித்தானியாவில் கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களுக்கு தீர்வாக கருதப்படுகிறது.
பிரித்தானியாவில் தற்போது 40 சதவீதம் பல்கலைக்கழகங்கள் நிதி பற்றாக்குறையில் உள்ளன.
Kent பல்கலைக்கழகம் திவாலாகும் நிலைக்கு சென்றதால், Greenwich பல்கலைக்கழகம் அதை கையகப்படுத்தும் வகையில் இந்த இணைப்பு நடைபெறுகிறது என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (UCU) தெரிவித்துள்ளது.
Kent பல்கலைக்கழகத்தின் இடைக்கால தலைவர் Georgina Randsley de Moura மற்றும் Greenwich துணைவேந்தர் Jane Harrington இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 2026-ல் Jane Harrington புதிய சூப்பர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பார்.
இந்த இணைப்பு கல்வி தரத்தை மேம்படுத்துவதுடன், நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பணியாளர் குறைப்பு, பாடநெறி மாற்றம் போன்ற சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK super university merger, Kent Greenwich university group, London South East University 2026, UK higher education reforms, university merger UK 2025, Kent Greenwich collaboration, Jane Harrington vice chancellor, UK university financial crisis, Office for Students UK, university redundancies England