இந்தியா மீது வரி ஒருபக்கம்., ஆயுத விற்பனையில் லாபம் மறுபக்கம் - அமெரிக்காவின் இரட்டைமுகம் அம்பலம்
இந்தியா மீது ட்ரம்ப் கடுமையாக வரிவிதிக்கும் அதேநேரத்தில், உக்ரைன் போரில் அமெரிக்கா பெரும் லாபம் பார்த்துவருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் காரணத்திற்காக இந்தியா மீது 50% வரி விதித்திருந்தாலும், உக்ரைன் போர் மூலம் அமெரிக்கா பெரும் லாபம் அடைந்துள்ளது என Observer Research Foundation (ORF) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020முதல் 2024 வரை, உக்ரைன் உலகின் மிகப்பாரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.
இந்த காலகட்டத்தில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்கள் 45 சதவீதமாக இருந்தது.
2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3,350 ERAM ஏவுகணைகள் உக்ரைனுக்கு 825 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விற்பனையின் நிதி ஆதாரம் NATO கூட்டாளிகள் மற்றும் அமெரிக்காவின் வெளிநாட்டு இராணுவ நிதி திட்டங்களில் இருந்து வந்தது.
மேலும், NATO கூட்டாளிகள் மற்றும் கனடா, உக்ரைனுக்காக 10 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட அமெரிக்க ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
2025 ஜூலை 14 அன்று, NATO தலைமை செயலாளர் மார்க் ரூட்டே மற்றும் ட்ரம்ப் சந்தித்தபோது, ஒவ்வொரு நாடும் 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள package ஒன்றை நிதியளிக்க ஒப்புக்கொண்டனர். இதுவரை, 2 பில்லியன் டொலர் நிதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
2025 ஹேக் மாநாட்டில், NATO நாடுகள் 2035 வரை பதிக்காப்பு செலவுகளை அதன் GDP-யின் 5 சதவீதமாக உயர்த்த ஒப்பந்தம் செய்தன. இது 2006-ல் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீத இலக்கை விட 150 சதவீதம் அதிகம்.
உலகளவில், அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி 2020-2024 காலத்தில் 43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதாவது, அமெரிக்க உக்ரைன் போரை வணிக வாய்ப்பாக மாற்றி, ஆய்த விற்பனையில் பெரும் லாபம் ஈட்டியுள்ளது
இந்நிலையில் இந்தியா மீது விதிக்கப்படும் கடும் வரி, அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US Ukraine war profits, Trump India tariff 2025, Russian oil India, US arms sales Ukraine, NATO arms funding, ORF Ukraine war report, India US trade tensions, Global defense spending 2024, Biden Trump Ukraine policy, India Russia oil deal