பிரித்தானியாவின் மிகவும் நம்பகமான கார்கள்., Suzuki Alto முதலிடம்.!
2025-ஆம் ஆண்டுக்கான பிரித்தானியாவின் மிகவும் நம்பகமான கார்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில் எளிய டிசைன் கொண்ட Suzuki Alto முதல் இடத்தை பிடித்தது.
Suzuki Alto 1981-ஆம் ஆண்டில் பிரித்தானிய சந்தையில் அறிமுகமான ஒரு சிறிய ஹாட்ச்பேக் ஆகும்.
சுசூகி ஆல்டோவின் வெற்றி
சுசூகி ஆல்டோ நூற்றுக்கு 95.1 என்ற மிக உயர்ந்த மதிப்பீட்டுடன் பட்டியலில் முன்னணியில் உள்ளது.
"பிரச்சனைகள் ஏதும் இல்லாமல், மிகச் சிறந்த கட்டமைப்பு தரத்துடன், குறைந்த தொழில்நுட்ப சிக்கல்களுடன் ஆல்டோ ஒரு நம்பகமான தெரிவு" என்று நிபுணர்கள் புகழ்ந்தனர்.
2015-ஆம் ஆண்டில் ஆல்டோ விற்பனை நிறுத்தப்பட்டாலும், பிரித்தானியாவின் Second Hand மார்க்கெட்டில் இதை மிகவும் குறைந்த விலையில் பெற முடியும் என கூறப்படுகிறது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள்
பிரித்தானியாவின் மிகவும் நம்பகமான கார்களின் பட்டியலில் Kia Venga 93.6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், Toyota Yaris 91.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ஜப்பானிய நிறுவனங்கள், குறிப்பாக Toyota மற்றும் Suzuki, இந்த பட்டியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
டொயோட்டாவின் Yaris, Hilux, Aygo, Avensis போன்ற கார்கள் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளன. சுசூகி ஆல்டோவும் அதன் மற்ற இரண்டு மொடல்களும் பட்டியலில் இடம்பெற்றன.
பட்டியலில் உள்ள 10 கார்களில் 8 ஜப்பானிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. இதில், கொரியாவின் KIA மற்றும் ஸ்பெயினின் Seat மட்டுமே ஜப்பான் அல்லாதவை.
இந்த பட்டியல் தற்போது விலைவாசி அதிகமாக உள்ள நிலையில் மக்களுக்கு நம்பகமான மற்றும் குறைந்த விலையில் உள்ள நல்ல கார்களை தேடுவதில் உதவியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK’s most reliable cars of 2024, Suzuki Alto, Kia Venga, Toyota Yaris, Kia, Seat and Mazda