பிரித்தானியாவின் மிகவும் ஆரோக்கியமற்ற நகரங்கள்., வெளியான பட்டியல்
பிரித்தானியாவில் மிகவும் ஆரோக்கியமற்ற நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அதிகமான துரித உணவு (Fast Foods) கடைகள் கொண்ட நகரங்கள் என்ற அடிப்படையில் இந்த மிகவும் ஆரோக்கியமற்ற நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2024 Office for Health Improvement and Disparities (OHID) தரவுகளின்படி, வட லண்டனில் உள்ள கேம்டென் (Camden), 100,000 பேருக்கு 417 ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுடன் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது 2017-ல் இருந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இப்பட்டியலில் Westminster 248 ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, Blackpool (226.3), Southwark (205.4) மற்றும் Manchester (183) அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.
Hackney-யில் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் 166 ஆக உயர்ந்து, 58வது இடத்திலிருந்து 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. Liverpool 175 கடைகளுடன் முதல் 10 நகரங்களில் சேர்ந்துள்ளது.
முந்தைய பட்டியலில் முதலிடத்தில் இருந்த Bury (256) இப்போது 10வது இடத்துக்கு சரிந்துள்ளது.
இதற்கிடையில், பெர்க்ஷையரில் உள்ள Wokingham (39 கடைகள்) மிகக் குறைவான ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் கொண்ட நகரமாகத் தொடர்ந்து உள்ளது.
இந்த ஆய்வு, பர்கர், பீட்ஸா, கெபாப், சிக்கன், இந்திய மற்றும் சீன உணவகங்கள் மற்றும் Fish & Chips கடைகளை உள்ளடக்கியது.
லண்டன் மற்றும் வடமேற்கு இங்கிலாந்து பகுதிகள் அதிக பாதிப்பு அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
Obesity Health Alliance இயக்குநர் கத்தரின் ஜென்னர், ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பாதிக்கின்றன என தெரிவித்துள்ளார்.
கேம்டென் கவுன்சில், சுற்றுலா மையமாக விளங்குவதால், மக்களை ஆரோக்கிய உணவிற்கு உற்சாகப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK’s unhealthiest towns, UK towns with the highest number of fast food outlets