ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியாகும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார பைக்!
இந்தியாவில் தயாரிக்கப்படும் Ultraviolette F77 மின்சார பைக் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
கர்நாடகா மாநில வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சரான எம்.பி. படீல், பெங்களூரு அருகில் ஜிகானியில் அமைந்துள்ள உல்ட்ராவயோலெட் கம்பெனியின் F77 மின்சார இருசக்கர வாகனங்களை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் செயல்முறையை செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இந்த பைக்கை "உலகத்தரத்திற்கான மின்சார பைக்குகள்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பைக்குகள் தங்கள் தரமான உற்பத்தி, நவீன தொழில்நுட்ப திறமை, மேலும் சிறந்த மைலேஜ் ஆகியவற்றிற்கு பெயர்பெற்றதாக விளங்குகின்றன என்று அவர் கூறினார்.
Ultraviolette நிறுவனம் ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, துருக்கி, ஸ்பெயின் போன்றவிடங்களுக்கு தங்கள் பைக்குகளை ஏற்றுமதி செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில், கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் நாராயண சுப்ரமண்யா, இணை நிறுவனர் நீரஜ் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏற்றுமதி தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, படீல், “மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நாடு இறக்குமதிக்கு மட்டுமே சார்ந்திருந்த காலம் இருந்தது. ஆனால் இப்போது 'Make in India for the World' திட்டத்தால், Ultraviolette நிறுவனங்கள் இந்திய சந்தைக்கு மட்டுமல்லாது, உலக சந்தைகளுக்கும் உயர்தர மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நிலையை அடைந்துள்ளன,” என்று தெரிவித்தார்.
மின்சார பைக்குகளை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது, இந்தியாவின் வளர்ந்து வரும் உற்பத்தித் திறனை உணர்த்தும் ஒரு சான்றாக இருக்கிறது என்றும், எதிர்காலத்தில் உல்ட்ராவயோலெட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உலகளாவிய வெற்றிக்கும் முழு ஆதரவு அளிக்கவும் உறுதியளித்தார்.
இந்த முயற்சி, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான அடையாளமாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |