மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் எலக்ட்ரிக் பைக்; Ultraviolet அறிமுகப்படுத்தும் கேம் சேஞ்சர்!
Ultraviolet நிறுவனம் மணிக்கு 200km வேகத்தைக் கடக்கக்கூடிய புதிய எலக்ட்ரிக் பைக்கை வெளியிட்டுள்ளது. அது குறித்த முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இதுவரை நம் நாட்டில் கிடைக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களில் பல நிறுவனங்களின் ஸ்கூட்டர், பைக்குகள், கார்களை பார்த்திருப்போம். மின் வாகனங்களை பொறுத்தவரை இரு சக்கர வாகனப் பிரிவில் ஸ்கூட்டர்களுக்கு அதிக தேவை உள்ளது.
ஆனால் எலெக்ட்ரிக் பைக்குகளைப் பொறுத்தவரை நாம் பின்தங்கியிருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும். சந்தையில் கிடைக்கும் சில பைக்குகள் கூட பெரும்பாலும் பிரபலமாக தெரியவதில்லை.
இந்த நிலையில், பிரபல உள்நாட்டு பிராண்டான, பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் அல்ட்ரா வயலட் ஆட்டோமோட்டிவ் ஒரு பெரிய பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக்கைக் கொண்டு வருவதோடு. இது சோதனை ஓட்டம் செய்யப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டியதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான வீடியோ டீசர் வெளியாகியுள்ளது.
இந்த சிறிய வீடியோவில், புதிய எலக்ட்ரிக் பைக் மணிக்கு 195 கிமீ வேகத்தை எளிதில் எட்டும் என்று காட்டுகிறது. இந்த பைக் EICMA-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், பெயர் வெளியிடப்படவில்லை. இது அடுத்த மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் வெளியான இந்த வீடியோ இந்த பைக் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
F99 Concept
அல்ட்ரா வயலட் நிறுவனத்தின் பெயரிடப்படாத இந்த அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக் அடுத்த மாதம் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இது F99 கான்செப்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதவிர X44 கான்செப்ட் பைக்கைக் கொண்டுவருவதற்கான பணிகளையும் நிறுவனம் தொடங்கியுள்ளது.
கேம் சேஞ்சர்
அல்ட்ரா வயலட் நிறுவனத்தின் இந்த அதிவேக ஸ்போர்ட்ஸ் லுக் எலக்ட்ரிக் பைக் உலகளாவிய இரு சக்கர வாகன சந்தையில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதிக விவரக்குறிப்புகளுடன் கூடிய பிரீமியம் இரு சக்கர வாகனங்களுடன் போட்டியிடுவதாக இது கூறுகிறது.
இதற்கிடையில், இந்த நிறுவனத்திடமிருந்து தற்போது கிடைக்கும் F77 மின்சார மோட்டார் சைக்கிள் 30.2kW திறன் கொண்டது. இதில் 40.4bhp ஆற்றலை வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது. இது 100Nm டார்க்கை உருவாக்குகிறது. இது பூஜ்ஜியத்திலிருந்து 60 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 152 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.
ஆனால் டீசரில் வெளியாகியுள்ள புதிய மாடல் பைக்கில் இதை விட அதிக திறன் கொண்ட மோட்டார் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் உதவியுடன் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும். இந்த புதிய பைக் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ultraviolette Electric Bikes, Ultraviolette F99, Ultraviolette Racing Electric Bikes, Ultraviolette Unveils New Electric Bike Can Cross 200kmph, எலக்ட்ரிக் பைக்