உடல் வலிகளை போக்கி வலுவாக இருக்க உதவும் உளுந்து கஞ்சி: எப்படி செய்வது?
அந்தக் காலங்களில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான காலை உணவு ரெசிபிகளில் ஒன்றாகும்.
பெண்களுக்கு பருவமடையும் போது கொடுக்கப்படுகிறது, ஏனெனில் இந்தக் கஞ்சி எலும்பு மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றை பலப்படுத்துகிறது.
உளுத்து கஞ்சியை குளிர்காலத்தில் காலை உணவு சாப்பிடுவது நன்றாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1/4 கப்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- வெல்லம்- 3/4 கப்
- ஏலக்காய் தூள்- 1ஸ்பூன்
- தேங்காய் பால்- 1 கப்
- நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்
- பாதாம்- 10
- தேங்காய் துருவியது- 1/4 கப்
செய்முறை
முதலில் உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு அலசி 3 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த உளுந்து மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி பின் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். ஒரு 5 -10 நிமிடத்தில் இது நன்கு கொதித்து கெட்டியாகி வரும்.
அடுத்து ஒரு தாளிப்பு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதி நறுக்கிய பாதாம் மற்றும் தேங்காய் துருவி போட்டு உளுந்தங்கஞ்சியில் சேர்க்க வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான மற்றும் ஆரோக்கியமான உளுந்தங்கஞ்சி தயார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |