தித்திக்கும் சுவையில் சத்தான உளுந்து பாயாசம்.., எப்படி செய்வது?
உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான உளுந்து பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 5 ஸ்பூன்
- பச்சரிசி- 2 ஸ்பூன்
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 5
- பாதாம்- 5
- தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் உளுந்து மற்றும் பச்சரிசி சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அரைத்த மாவை தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கரைத்த மாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து பின் வெல்லக்கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கெட்டியாக வந்ததும் இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், தேங்காய் சேர்த்து சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான உளுந்து பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |