மகளிர் தினத்தில் பிறந்த என் மகளே! மீண்டும் தந்தையான இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
உமேஷ் யாதவ்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
உமேஷ் யாதவ் - தான்யா தம்பதிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது.
இரண்டாவது குழந்தை
இந்த நிலையில் உமேஷ் யாதவ் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். அதிலும் குறிப்பாக மகளிர் தினமான இன்று தனது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
Blessed with baby girl ❤️ pic.twitter.com/nnVDqJjDGs
— Umesh Yaadav (@y_umesh) March 8, 2023
இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ள உமேஷ் யாதவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.