ஐபிஎல்! சிறுத்தை போல பாய்ந்து caught & bowled செய்த உமேஷ் யாதவ்... வைரலாகும் வீடியோ
ஐபிஎல் போட்டியில் உமேஷ் யாதவ் தான் வீசிய பந்தில் தானே அபாரமான கேட்ச்சை பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி ஓப்பனிங் வீரர் ப்ரித்வி ஷா தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார்.
அதன்படி அவருக்கு கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ் பந்துவீசினார். பந்தானது பேட்டின் முனையில் பட்டு வேகமாக உமேஷ் யாதவை நோக்கி சென்றது.
— Maqbool (@im_maqbool) April 28, 2022
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தும் கெத்து காட்டும் சென்னை, மும்பை அணிகள்!
அதை அவர் புலி போல பாய்ந்து சென்று கீழே விழுந்து பிடித்தார். பின்னர் பந்தை மேலே தூக்கி வீசி தனது விக்கெட்டை கொண்டாடினார் உமேஷ் யாதவ்.
இருந்த போதிலும் மற்றொரு தொடக்கவீரர் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடியதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி இப்போட்டியில் வெற்றியை சுவைத்தது.