வெயில் உங்களை சுட்டெரிக்குதா? உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள புதினா ஜூஸை இப்படி எடுத்துகோங்க!
வெயிற்காலம் வந்துவிட்டாலே சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இதனால் பல நோய் தொற்றுகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள ஒரு சில வழிகள் உள்ளன.
அந்தவகையில் தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளுர்ச்சி தரும் புதினா ஜூஸ் எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை - ஒன்று
- தேன் - 2 ஸ்பூன்
- புதினா - 1 கட்டு
- இஞ்சி - ஒரு துண்டு
- உப்பு - சிறிதளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- சீரக தூள் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் புதினாவை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும்.
அரைத்த விழுதுடன் தேன், உப்பு, சீரக தூள், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டவும். இதனுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து கலக்கவும். பின்னர் எலுமிச்சை துண்டுடன் அலங்கரித்து பரிமாறவும்.
நன்மைகள்
- புதினா ஜூஸ் குடித்தால், அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகிவிடும்.
- ஜலதோஷம் மற்றும் காய்ச்சலாம் அவதிப்படுபவர்கள் புதினா சாறினை எடுத்துக் கொண்டால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். இது சிறந்த கிருமி நாசினி. மேலும் நுரையீரலை சுத்தப்படுத்தி பலப்படுத்தும்.
- புதினா சாறு சருமத்திற்கு போஷாக்கும் அளிக்கும். சுருக்கங்களைப் போக்கும். இளமையான சருமத்தை தரும். அலர்ஜி, சரும எரிச்சல், மங்கு ஆகியவற்றை போக்கிவிடும். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளையும் நீக்கி சரும பொலிவை தரும்.
- புதினா அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது. பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
- புதினாவின் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.