புதிய உலக வரைபடத்தை ஏற்றுக் கொண்ட ஐ.நா: பெரிதான ஆப்பிரிக்கா: அமெரிக்கா எதிர்ப்பு
c: ஆப்பிரிக்க கண்டம் பெரிதாக சித்தரிக்கப்பட்ட புதிய வரைபடத்தை ஐ.நா ஒப்புக் கொண்டுள்ளது.
புதிய உலக வரைபடம்
பாரம்பரிய உலக வரைபடத்திற்கு மாற்றாக புதிய ஈக்வல் எர்த்(Equal Earth) என்ற புதிய வரைபட முறையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
உலக வரைபடத்தில் கண்டங்களின் பரப்பளவை சமச்சீராக காட்டுவது மற்றும் வரலாற்று ரீதியான தவறுகளை திருத்திக் கொள்வதை புதிய வரைபடம் நோக்கமாக கொண்டுள்ளது.

இதில், ஆப்பிரிக்க கண்டம் பெரிதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டம் சற்று சிறியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
1569 ம் ஆண்டு கடல்வழிப் பயணத்திற்காக பிளெமிஷ் நிலவரைபட வல்லுநர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கிய வரைபட முறைக்கு மாற்றாக இந்த புதிய வரைபட முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
164 நாடுகளின் ஆதரவும், அமெரிக்காவின் எதிர்ப்பும்
இந்த புதிய வரைபடம் தொடர்பான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது(1), மற்றும் 6 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
🎉Congratulations to the delegation of Togo 🇹🇬 on the adoption this morning by the #UNGA of resolution A/80/L.104, “Correct the Map”, an @_AfricanUnion initiative promoting more accurate and equitable global cartographic representation, particularly of #Africa.
— African Union Mission to the UN (@AfricanUnionUN) September 4, 2026
A significant… pic.twitter.com/oxZCbeMUTt
தீவிரமான சர்வதேச பிரச்சினைகளை விட்டுவிட்டு 16ம் நூற்றாண்டு வரைபடங்கள் குறித்து விவாதிப்பது ஐ.நா மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது என்று அமெரிக்க பிரதிநிதி யாரினா பெரென்செவிச் வாக்கெடுப்புக்கு முன்பு விமர்சித்து இருந்தார்.
அதே நேரம், வரைபடம் கல்வி மற்றும் கலாச்சார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |