ஐநாவின் அறிவிப்பால் அதிர்ந்து போன உக்ரைன்: ஊழியர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு என்னென்ன?
ஐக்கிய நாடுகளின் சபையில் பணிபுரியும் ஊழியர்கள் போர்(war) மற்றும் படையெடுப்பு(invasion) ஆகிய வார்த்தைகளை பயன்படுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக வெளிவந்துள்ள தகவலுக்கு உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை முன்னகர்த்தி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக போர்(war) மற்றும் படையெடுப்பு(invasion) ஆகிய வார்த்தைகளை பயன்படுவதை தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக வெளிவந்த இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
It’s hard to believe that the UN could essentially impose the same kind of censorship as the Kremlin imposes inside Russia now by banning the use of words ‘war’ and ‘invasion’ among UN staff. I urge the UN to swiftly refute such reports if they are false. UN reputation at stake.
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 8, 2022
ஐக்கிய நாடுகள் சபை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதால், ஐக்கிய நாட்டு சபை ஊழியர்கள் உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழ்நிலையை பற்றி விவாதிக்கும் போதோ அல்லது கருத்து தெரிவிக்கும் போதோ போர்(war) மற்றும் படையெடுப்பு(invasion) ஆகிய வார்த்தைகளை பயன்படுவதை தவிர்க்குமாறும், அதற்கு மாற்றாக ரஷ்யா-உக்ரைன் முரண்பாடு அல்லது ராணுவ தாக்குதல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துமாறும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி ஐ.நா குறுந்செய்தி அனுப்பி இருப்பதாக நேற்று சில முன்னணி செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்திருந்தன.
மேலும் ஐ.நாவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் உக்ரைன் நாட்டு தேசிய கொடியை அவர்களது சமூகவலைத்தள பக்கத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்த பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாக தெரிவித்து இருந்தன.
I lead @UN communications. No such official communication has gone out to global staff to refrain from using certain words. https://t.co/RVOZakUqH1
— Melissa Fleming ?? (@MelissaFleming) March 8, 2022
இந்த நிலையில், ஐ.நாவின் இந்த வார்த்தை தணிக்கை கட்டுப்பாடை நம்புவதற்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும், ஐநாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பான என்றால் அதனை ஐ.நா உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும் என உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்திருந்தார்.
இதனிடையே இதற்கு பதிலளித்துள்ள ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்பின் முன்னணி தலைவர்களின் ஒருவரான மெலிசா ஃப்ளெமிங், அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைச் செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோவின் இணையதள பதிவை சுட்டி காட்டி இது உண்மைக்கு புறம்பான செய்தி என தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வார்த்தைக் கட்டுப்பாடுகள் தொடர்பான எந்த ஒரு குறுந்செய்தியும் அனுப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைச் செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோவின் இணையதள பதிவில் இந்த போர் அர்த்தமற்றது இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நல்லெண்ண முயற்சிகளையும் ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.