தீயணைப்பதை பார்க்கும் வினோத ஆசை - சொந்த வீட்டிற்கே தீ வைத்த நபர்

United Kingdom Fire
By Karthikraja May 08, 2025 03:14 PM GMT
Report

 வினோத ஆசையால், பிரித்தானியாவை சேர்ந்த நபர் தனது சொந்த வீட்டிற்கே இரு முறை தீ வைத்துள்ளார்.

சொந்த வீட்டிற்கு தீ வைப்பு

பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்டைச் சேர்ந்தவர் 26 வயதான ஜேம்ஸ் பிரவுன்.

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மாலை, ஆஷிங்டனில் உள்ள லெவன்த் அவென்யூவில் உள்ள தனது வீட்டில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அவசர சேவைக்கு அழைத்துள்ளார். 

தீயணைப்பதை பார்க்கும் வினோத ஆசை - சொந்த வீட்டிற்கே தீ வைத்த நபர் | Un Man Obsessed Watch Firefighting Burnt Own House

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அலமாரியில் ஏற்பட்டிருந்த தீயை அணைத்தனர்.

மின்சார மீட்டர் மூலம் தீ விபத்து ஏற்பட்டது என ஜேம்ஸ் பிரவுன் தெரிவித்ததால், தீயணைப்பு வீரர்கள் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு சென்றனர.

90 நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவசர சேவையை அழைத்த பிரவுன், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். இந்த முறை, தீயணைப்புப் படையினர் திரும்பி வந்து பார்த்தபோது, ​​படுக்கைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. 

ஐபிஎல் வீரர்கள் தங்கியிருந்த அறையில் தீ விபத்து - வீரர்களின் நிலை என்ன?

ஐபிஎல் வீரர்கள் தங்கியிருந்த அறையில் தீ விபத்து - வீரர்களின் நிலை என்ன?

பிரவுனிடம் விசாரித்தபோது, ​​மின் மீட்டர்தான் காரணம் என மீண்டும் கூறினார்.

வினோத ஆசை

முந்தைய வருகையின் போதே மின்சாரத்தை துண்டித்து விட்டு சென்றதால், அவரின் பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சந்தேகங்களை எழுப்பியது.

மேலும், தீயணைப்பு வீரர்கள் அவரின் வீட்டில் இருக்கும் போது, அவர் உற்சாகமாக இருப்பதை கவனித்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தானே தீ வைத்ததை ஒப்பு கொண்டார்.

தீயணைப்பதை பார்க்கும் வினோத ஆசை - சொந்த வீட்டிற்கே தீ வைத்த நபர் | Un Man Obsessed Watch Firefighting Burnt Own House

மேலும், கடந்த ஒரு வருடத்தில், தீ விபத்து என கூறி, 80 முறைக்கு மேல் தீயணைப்பு துறையை அழைத்தது தெரிய வந்தது. அவர் தீயணைப்பு வீரராக ஆசைப்பட்டதாகவும், அது நடக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதை பார்க்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிறைத்தண்டனை

நீதிமன்றத்தில் தீர்ப்பின் பொது பேசிய நீதிபதி, "உங்கள் முதன்மை ஆர்வம் தீ வைப்பதற்கு பதிலாக தீயணைப்பு சேவையைத் தொடர்புகொள்வதாகத் தெரிகிறது.

நீங்கள் தீயணைப்புப் படையின் வளங்களை வீணாக்குகிறீர்கள், இது உயிர்கள் ஆபத்தில் இருக்கும் மிக முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். நீங்கள் ஒரு பாடம் கற்றுக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன்" என் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, 8 மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதித்ததோடு, இரண்டு ஆண்டுகளுக்கு 150 மணிநேர ஊதியம் இல்லாத வேலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

தற்போது அவரின் செயலுக்கு அவர் வருந்துவதாகவும், கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் தீயணைப்புத் துறையைத் தொடர்புகொள்வதைத் தவிர்த்து வருவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US