இஸ்ரேலின் போர் குற்றங்களை விசாரித்தவருக்கு கனடா அதிகாரிகளால் நெருக்கடி
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய துஷ்பிரயோகங்களை விசாரித்த முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர், கனேடிய அதிகாரிகளால் நெருக்கடி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அளிக்கப்பட்ட நெருக்கடி
காஸா தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தபோது, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணரான Richard Falk கனடா அதிகாரிகளால் தமக்கு அளிக்கப்பட்ட நெருக்கடி தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார்.
வியாழக்கிழமை ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் அவரது மனைவியுடன் அவர் ஒரு குற்றவாளியைப் போல விசாரிக்கப்பட்டதாக ரிச்சர்ட் பால்க் குறிப்பிட்டுள்ளார்.
95 வயதான ரிச்சர்ட் பால்க், கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டு, அவரது மனைவியுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என குறிப்பிட்டுள்ளார் ரிச்சர்ட் பால்க். அமெரிக்க குடிமக்களான ரிச்சர்ட் மற்றும் அவரது மனைவி Elver ஆகியோர் பாலஸ்தீன தீர்ப்பாயத்தில் பங்கேற்க ஒட்டாவாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகால காஸா மீதான குண்டுவீச்சில் கனேடிய அரசாங்கத்தின் பங்கை ஆராய வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சட்ட நிபுணர்களை தீர்ப்பாயம் ஒன்று சேர்த்தது.
நான்கு மணி நேரம்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஐ.நா விசாரணையும் ஏராளமான உரிமைக் குழுக்களும் இனப்படுகொலை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச சட்ட நிபுணர் பால்க் தெரிவிக்கையில், தன்னையும் தனது மனைவியையும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்காக தடுத்து வைத்ததாகவும், இஸ்ரேல் மற்றும் காஸா மீதான அவர்களின் பணிகள் குறித்து கேட்டதாகவும் கூறினார்.

காஸா உட்பட உலகின் பல பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து உண்மையைச் சொல்ல முயற்சிப்பவர்களைத் தண்டிக்கும் உலகளாவிய உந்துதலின் ஒரு பகுதியாக இந்த விசாரணை இருப்பதாக பால்க் நம்புவதாகக் கூறினார்.
ஆனால் கனடாவின் CBSA தெரிவிக்கையில், இது வெறும் வழக்கமான நடவடிக்கை மட்டுமே எனவும், தவறான அறிகுறியாக பார்க்கப்படக்கூடாது எனவும் விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |