மரியுபோல் மக்களை பாதுகாக்க வெளியேற்ற ஐ.நா தயார்: இருநாட்டின் ஒத்துழைப்பும் தேவை என அறிவிப்பு!
- மரியுபோலில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கிறது.
- ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்-வுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் செய்தியாளர்களை சந்திதார்.
-
பொதுமக்களை விருப்பபட்ட திசையில் பாதுகாப்பாக வெளியேற்ற வழிசெய்ய வேண்டும் என பரிந்துரை.
உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக அதன் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை(UN) தயாராக இருப்பதாக அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres)தெரிவித்துள்ளார்.
"We recognise that we face a crisis within a crisis in Mariupol."
— Sky News (@SkyNews) April 26, 2022
UN Secretary General Antonio Guterres says the United Nations is ready to "fully mobilise" its human and logistical resources to help save lives in Mariupol.
Live updates: https://t.co/tc1JT2tDEy pic.twitter.com/8cvKn8ZT6N
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்-வுடன் ( Sergei Lavrov) இணைந்து செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், மரியுபோல் நகரில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து மனித மற்றும் தளவாட வளங்களையும் திரட்ட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மரியுபோலில் எற்பட்டுள்ள இந்த நிலைமை நெருக்கடிக்குள் நெருக்கடி என விவரித்த அன்டோனியோ குட்டரெஸ், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவ படைகளுடன் இணைந்து செயல்பட்டு பொதுமக்களை விருப்பபட்ட திசையில் பாதுகாப்பாக வெளியேற்ற வழிசெய்ய வேண்டும் என பரிதுரைத்துள்ளார்.
மேலும் இந்த மனிதாபிமான வெளியேற்ற நடவடிக்கைகள் பாதுகாப்பாக அமைவதை இருநாடுகளும் உறுதிபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: புடினை எதிர்த்தால் தலையை வெட்டி எடுத்துவிடுவேன் என்றவருக்கு...ரஷ்யாவின் நாயகன் பட்டம்
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்-வுடன் வெளிப்படையான விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த அன்டோனியோ குட்டரெஸ் போர் விரைவில் முடைவடைய வேண்டும் என தெரிவித்தார்.