ரஷ்யாவின் வெறியாட்டத்தால் உக்ரைனில் இதுவரை இறந்தவர்கள் எத்தனை பேர்? ஐ.நா அதிர்ச்சி தகவல்
ரஷ்ய உக்ரைனில் நடத்திய தாக்குதலில் இதுவரை 3,153 பேர் பலியாகியுள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி 2 மாதங்களைக் கடந்துள்ளது. போரில் உக்ரைனுக்கு அதிக சேதங்களை உருவாக்கியுள்ள ரஷ்யா தொடர்ந்து அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துக் கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக, மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் முழுமையாக ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சில நாள்களுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யப் படைகள் 2 ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததுடன் சில அடுக்குமாடிக் கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்தது.
இரத்தத்தில் தினமும் குளிக்கும் புடின்! அவரை எந்த வகை புற்றுநோய் தாக்கியது? அம்பலமான பகீர் ரகசியங்கள்
இந்நிலையில், போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனைச் சேர்ந்த 3,153 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.