95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம்
உக்ரைன் போரில் ரஷ்யாவின் ஆக்ரோஷத்தை கண்டித்து கொண்டு வரப்பட்ட ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பிளவுபட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்கில் கூடிய ஐ.நா பொதுச்சபை
ரஷ்யாவின் முழு அளவிலான உக்ரைன் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நியூயார்க்கில் கூடியது.
இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா இணைந்து உருவாக்கிய உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பிலான தீர்மானத்தை சபை நிறைவேற்றியது.

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது?
நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், "உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு" ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான ஐ.நாவின் அர்ப்பணிப்பை வெளிப்படையாக மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பிளவுபட்ட வாக்குகள்
தீர்மானம் நிறைவேற்றப்பட வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டது.
அதன்படி, இறுதி கணக்கெடுப்பில் 93 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும், 18 எதிராகவும், 65 நாடுகள் வாக்களிக்காமலும் இருந்தன.
⚡️ BREAKING: The UN General Assembly supported Ukraine's resolution condemning Russian aggression
— NEXTA (@nexta_tv) February 24, 2025
The US and Russia voted against the resolution. China and India abstained.
A total of 93 countries voted in favor, 18 against, and 65 abstained. pic.twitter.com/T4f4a1Lu4M
அமெரிக்கா இதில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா வரைந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், அதற்கு பதிலாக தனது சொந்த மாற்றுக் கருத்தை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான இந்த போட்டி தீர்மானம் உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதை குறிப்பிடத்தக்க வகையில் தவிர்த்ததுடன் மட்டுமில்லாமல் ரஷ்யாவின் நடவடிக்கைகளை "படையெடுப்பு" என்பதற்கு பதிலாக "மோதல்" என்று வகைப்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |