இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்: நிவாரண பணிகளை தீவிரப்படுத்திய ஐ.நா
இலங்கையில் ஏற்பட்டுள்ள புயல் வெள்ள பாதிப்புகளை சமாளிப்பதற்கான நிவாரண உதவிகளை ஐ.நா செயல்படுத்த தொடங்கியுள்ளது.
இலங்கையை உலுக்கிய புயல் வெள்ளம்
டிட்வா புயல் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பலர் தங்கள் உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைகளுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை(ஐ.நா) அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், நீர், கல்வி, பாதுகாப்பு, தங்குமிடம், மற்றும் ஆரம்பகால மீட்சி போன்ற முக்கிய நிவாரண தேவைகளை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுகுவதில் உள்ள சவால்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF), வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் காரணமாக மற்ற பகுதிகளிலிருந்து இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த பதுளை மாவட்டத்தின் 25 பாதுகாப்பு மையங்களுக்கு அத்தியாவசியமான குடிநீரை விநியோகம் செய்துள்ளது.

நிவாரண முயற்சிகள் தொடர்பாக உறுதியளித்து இருந்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே, தேசிய மீட்பு மற்றும் ஆரம்பகால மீட்சி முயற்சிகளுக்கு ஐ.நா. குழுக்கள் முழு ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நட்பு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |