Lamination Paper பற்றாக்குறை.., புதிய Passport பெற முடியாமல் திணறும் பாகிஸ்தான் மக்கள்
பாகிஸ்தானில் லேமினேஷன் பேப்பர் பற்றாக்குறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாஸ்போர்ட் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் பொருளாதாரம்
பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவியைப் பெற வேண்டும் என்பதற்காக வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, வரியை அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகள் வரை தடைபட்டுள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் பாஸ்போர்ட் எடுக்க முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
லேமினேஷன் பேப்பர் பற்றாக்குறை
பாகிஸ்தானிய குடிமக்கள் தற்போது புதிதாகப் பாஸ்போர்ட் எடுப்பதில் பல பிரச்சனைகள் உள்ளன. அதாவது, பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லேமினேஷன் பேப்பரின் பற்றாக்குறையால் இந்த சிக்கல் உருவாகியுள்ளது.
இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாஸ்போர்ட் எடுக்க முடியாமல், வெளிநாடு செல்லும் கனவு வீணாகி வருவதாக கூறியுள்ளனர். முக்கியமாக, வேலை அல்லது ஓய்வுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது ஆபத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |