செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை முடக்க கூகுள் முடிவு: ஆக்டிவேட் செய்வது எப்படி?
ஆக்டிவேட்டில் இல்லாத அனைத்து கணக்குகளையும் முடக்கப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு
கூகுள் நிறுவனம் தங்களது செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் அவ்வப்போது தனியுரிமை கொள்கைகளை புதுப்பித்து வருகிறது, அதனடிப்படையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், 2 வருடங்களுக்கு மேல் ஆக்டிவேட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நிரந்தரமாக நீக்க இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை டிசம்பர் 2023 ல் தொடங்க இருப்பதாகவும், இது தொடர்பான எச்சரிக்கையை பயனர்களுக்கு மின்னஞ்சல்கள் வாயிலாக அனுப்பி இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பயனர்களின் பாதுகாப்பு மேம்பாட்டிற்கும், தேவையற்ற கணக்குகளை நீக்குவதற்கு மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே இந்த புதிய கொள்கை பொருந்தும் எனவும், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களால் கையாளப்பட்டு கணக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.
James Martin/CNET
கூகுளின் இந்த எச்சரிக்கை மின்னஞ்சலிலேயே, நீக்கப்பட இருக்கும் தனிப்பட்ட கணக்குகளில் உள்ள தரவுகளை கூகுள் எவ்வாறு கையாளும் என்று பயனர்களுக்கு தெரிவித்து இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.
ஆக்டிவேட் செய்வது எப்படி?
நீங்கள் செயல்படுத்தாமல் விட்ட கூகுள் கணக்கு உங்களிடம் இருந்தால் அதை ஆக்டிவேட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறையை பயன்படுத்துங்கள் போதும்.
ஒருவேளை பழைய கணக்கு உங்களுக்கு தேவையில்லை என்று நீங்கள் கருதினால், அதை அப்படியே விட்டு விடலாம்.
வழிமுறைகள்
- சம்பந்தப்பட்ட கூகுள் கணக்கின் மின்னஞ்சலை படிப்பது அல்லது புதிய மின்னஞ்சலை அனுப்புவது.
- Google-லில் உள்ள தளங்களை சம்பந்தப்பட்ட கணக்கில் இருந்து பயன்படுத்துவது.
- செயலிகளை Google Play Storeல் பதிவிறக்கம் செய்வது.
- கூகுள் கணக்கில் இருந்து மூன்றாம் தரப்பு தளத்தினை Sign In செய்வது. யூடியூப் வீடியோவை பார்ப்பது.
- ஒருவேளை சம்பந்தப்பட்ட கணக்கில் இருந்து ஏதேனும் சந்தா செலுத்தப்பட்டு வந்தாலும் கூகுள் அந்த கணக்கை நீக்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |