நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய லியோனல் மெஸ்ஸி
ஒப்புதல் பெறாமல் சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் அணி நிர்வாகத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் லியோனல் மெஸ்ஸி.
மன்னிப்பு கோரியுள்ள மெஸ்ஸி
இந்த விவகாரத்தில் அணி நிர்வாகம் எடுக்கும் முடிவுக்காக தாம் காத்திருப்பதாகவும் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணித்தலைவர் மெஸ்ஸி, சவுதி அரேபியா பயணத்திற்காக PSG அணி நிர்வாகத்தால் இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
@getty
கடந்த ஞாயிறன்று Lorient அணிக்கு எதிரான ஆட்டத்தில் PSG அணி வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி சுமார் 90 நிமிடங்கள் களத்தில் இருந்தார்.
ஆனால் அதன் அடுத்த நாள், உரிய ஒப்புதல் பெறாமல் மெஸ்ஸி தனிப்பட்ட காரணங்களுக்காக சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், தற்போது மன்னிப்பு கோரியுள்ள மெஸ்ஸி, தாம் செய்தது தவறு என்பதை குறிப்பிட்டதுடன், அணி நிர்வாகத்தின் முடிவுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, கடந்த வாரங்களில் முக்கிய ஆட்டத்திற்கு பின்னர் ஓய்வு அளிக்கப்படுவது போன்று இந்த முறையும் இருக்கலாம் என கருதி பயணத்திற்கு ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மெஸ்ஸி வெளியேறுவார்
மேலும், பலமுறை ரத்து செய்யப்பட்டு, தவிற்கமுடியாத சூழலில் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றதாகவும் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். PSG அணி நிர்வாகத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், மெஸ்ஸி வெளியேறுவார் என்றே கூறப்படுகிறது.
சவுதி அரேபியா அரசாங்கமானது மெஸ்ஸியை தங்களின் சுற்றுலா தூதுவராக நியமித்துள்ளது. இதனிடையே, மெஸ்ஸியின் மோசமான ஆட்டமும் அவரை இடைநீக்கம் செய்ய முக்கிய காரணங்களில் ஒன்று என PSG அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.