ஆசிய கோப்பையில் முறியடிக்கப்படாத இந்தியாவின் 9 சாதனைகள்
ஆசிய கோப்பையில் முறியடிக்கப்படாமல் உள்ள இந்தியாவின் சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆசிய கோப்பை 2025
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 27 வரை துபாய் மற்றும் அபுதாபியில் T20 வடிவத்தில் நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
அபுதாபியில் இன்று உள்ளூர் நேரப்படி மாலை 6;30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு இரவு 8 மணி) தொடங்கும் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகிறது.
முறியடிக்கப்படாத இந்தியாவின் சாதனைகள்
தனிநபர் அதிகபட்ச ஓட்டம்
2012 ஆசிய கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விராட் கோலி 183 ஓட்டங்கள் குவித்தார்.
இதுவே தற்போது வரை, ஆசிய கோப்பையில், ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டமாக உள்ளது.
அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
2008 ஆசிய கோப்பையில், இந்திய மற்றும் ஹாங்காங் இடையேயான போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ஓட்டங்கள் குவித்தது.
375 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி, 36.5 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம், இந்திய அணி 256 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஆசிய கோப்பையில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற அணி ஆகும்.
அதிக சிக்ஸர்கள்
ஆசிய கோப்பையில் 40 சிக்ஸர்கள் அடித்து, அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
26 சிக்ஸர்களுடன் பாகிஸ்தானை சேர்ந்த அப்ரிடி 2வது இடத்திலும், 23 சிக்ஸர்களுடன் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 3வது இடத்திலும் உள்ளனர்.
அதிக போட்டிகள் விளையாடிய வீரர்
ஆசிய கோப்பையில், 36 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
26 போட்டிகளில் விளையாடி, ரவீந்திர ஜடேஜா 2வது இடத்தில் உள்ளார்.
பார்ட்னர்ஷிப்
2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 3 விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி 233 ஓட்டங்கள் குவித்தனர்.
இதுவே ஆசிய கோப்பையில், அதிபட்ச பார்ட்னர்ஷிப்பாக உள்ளது.
குறைந்த பந்து விளையாடி இறுதிப்போட்டியில் வெற்றி
2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது.
இதில் முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, 15.2 ஓவர்களில், 50 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
51 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, விக்கெட் எதுவும் இழக்காமல் 37 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அதிக கோப்பை வென்ற அணி
இந்திய அணி இதுவரை ஆசிய கோப்பையின் 11 இறுதிப்போட்டிகளில் விளையாடி, 8 முறை கோப்பை வென்றுள்ளது.
6 முறை கோப்பை வென்று இலங்கை அணி 2வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து 3 முறை கோப்பை
1988, 1990-91 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 முறை கோப்பை வென்று, தொடர்ச்சியாக கோப்பை வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஒரே அணித்தலைவர்
ஆசிய கோப்பை ODI வடிவத்திலும், T20 வடிவத்திலும் கோப்பை வென்ற ஒரே அணித்தலைவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |