பிரேசிலில் வெளியுலகத் தொடர்பின்றி வாழும் அவா பழங்குடி: உணவு தேடி வெளியே வந்த காட்சி
Uncontacted Awá Tribe stepping out in Brazil : பிரேசிலில் வெளி உலகத் தொடர்பின்றி வாழ்ந்து வரும் அவா பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் தனிமையில் இருந்து வெளியேறி வந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிமையில் இருந்து வெளியேறிய அவா பழங்குடி
அமேசான் மழைக்காடுகளில் வெளி உலகின் தொடர்புகள் எதுவுமின்றி வாழ்ந்து வரும் அவா(Awa) பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் சுமார் 20 பேர் தங்கள் தனிமையான வாழ்வில் இருந்து வெளியேறி திங்கட்கிழமை கிராமத்திற்குள் நுழைந்து அங்கிருந்த நிர்வாக குழுவுடன் உரையாடியுள்ளனர்.
வடகிழக்கு மாகாணமான மரான்ஹாவோவில்(Maranhão) உள்ள அராரிபோயா(Arariboia) என்ற பூர்வீக பிராந்தியத்திற்குள் அமைந்துள்ள கிராமத்தில் இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
An isolated group of Awa Indigenous people emerged from a remote part of Brazil's Amazon rainforest, highlight the threats they face from illegal loggers and ranchers, advocates say. The rare footage was released by Survival International https://t.co/9LhXdWdOzN https://t.co/2vx2sgM4GZ
— Reuters (@Reuters) November 18, 2026
கிராமத்தில் குவாஜாஜாரா(Guajajara) பழங்குடி மக்கள் அதிக அளவு வசித்து வரும் நிலையில், தங்களை தேடி வந்த அவா பழங்குடி மக்களுக்கு உணவு வழங்கியதாக உள்ளூர் சமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வைவல் இன்டர்நேஷனல் தகவல் படி, அவா பழங்குடி மக்கள் சேனைக் கிழங்குகளை கேட்டுக் பெற்றுக் கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
பதிவான காட்சிகள்
குவாஜாஜாரா கிராம மக்களால் படம் பிடிக்கப்பட்டு சர்வைவல் இன்டர்நேஷனல் வெளியிட்ட காட்சிகளில், காட்டின் எல்லையில் அவா பழங்குடியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நிற்பது பதிவாகியுள்ளது.
அவர்கள் மரம் மற்றும் செடிகளுக்கு நடுவே நிற்கும் அந்த மக்கள் ஆடைகள் எதுவுமின்றி கழுத்தில் மணிகளை மட்டும் அணிந்து இருந்தனர். மேலும் ஆண்களின் கையில் வில் மற்றும் நீண்ட அம்புகள் இருந்தன.

அவசர எச்சரிக்கை
பூர்வீகக்குடிகளின் நிலங்கள் அதிக அளவு ஆக்கிரமிக்கப் படுவதால் இத்தகைய வெளித்தோற்றங்கள் நடைபெறுவதாக மனித உரிமை அமைப்புகள் செவ்வாய்க்கிழமை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவா பழங்குடி மக்கள் பாரம்பரியமாக வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் மூலம் வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், வேட்டைக்காரர்கள், சட்டவிரோத மரக்கடத்தல், கால்நடை வளர்ப்பாளர்களின் அத்துமீறல்கள் ஆகியவற்றால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.